ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 14 February 2010

வணக்கம் ..... ! சொல்லுங்க ....... !

காலாற - மெதுவா - மகிழ்ச்சியோட நடக்கற கலையே ஒரு தனிக்கலை. ஆமாம் - மனத்திற்கு ஒரு அழகுணர்ச்சியைத் தருவது நடைப்பயிற்சிதான். தன்னை மறந்து - கைகளை வீசி - காற்றை இழுத்து - ஆழமாய் மூச்சு விட்டு - கண்கள் சுற்றுச் சூழலைப் பார்த்து - சுவையோடு நடை போடுவது ஒரு தனி இன்பம் தான். அதிலும் கூடவே துணையாக துணைவியும் நடப்பது தனி சுகம்தான்.

நம்மை விட்டுப் பிரியாமல் இருப்பது இப்போது எல்லாம் அலைபேசிதான் ! ஒன்று கையின் அணைப்பில் இருக்கும் இல்லை எனில் நெஞ்சின் அணைப்பில் இருக்கும். அலைபேசியின் அழைப்பு நடக்கும் போதும் நம்மைத் தட்டி எழுப்பும் ! பின்னால் வருவது துணையே ஆயினும், அருகில் வருவது அயலாரே ஆயினும் அதற்கு வேறுபாடு கிடையாது !

வணக்கம் ! சொல்லுங்க ..... ! என்று கணீர்க் குரல் - வந்த அலைபேசி அழைப்புக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிய சொற்கள். இக்குரலைக் கேட்டதும் அருகே வந்த பெரியவர் சற்றே வியப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பார்வையைச் செலுத்தி புன்னகை பூத்தார் ! தடுமாறி நடந்த பெரியவர் சற்றே கையமர்த்தி நின்று " இப்பொழுது எல்லாம் நல்ல தமிழில் யார் பேசுகிறார்கள் ? உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் ! உலகின் முதன்மையான 108 மொழிகளில் முதன்மையானது தமிழ் ! இக்காலத்தில அதை மறந்து விட்டனர் இத்தலைமுறையினர். எங்கே தமிழ் ? அதைக் கேட்பதே அரிதாக உள்ளது " என்றார் அப்பெரியவர்.

அவர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது ! நாங்கள் யார் என்பது அவருக்குத் தெரியாது ! இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே ! நான் ஒரு தமிழ்க் கூட்டத்திற்குத் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்றார்.

அவருக்கு வயது 82 ! தள்ளாமை நடையில் தெரிந்தது ! ஆனாலும் தூயமையான வெள்ளுடையில் கையில் ஒரு பையுடன் நடந்தார் ! சற்றே உயரமான தோற்றமுடையவர்
! இப்பொழுதெல்லாம் எதுவும் நினைவில் நிற்பது இல்லை - மறந்து போய் விடுகிறது எனக்கூறி எங்கள் பெயரை இரண்டு மூன்று முறை கேட்டு நினைவு படுத்திக் கொண்டார். தன் பெயர் சண்முகக் கனி என்றார். எங்கள் அடுக்ககத்தில் புதிதாகக் குடி வந்திருப்பதாகவும் கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நடைப்பயிற்சியில் தான் அவரைச் சந்தித்தோம். தமிழறிஞர்களின் மாலை நேரக் கூட்டத்திற்கு தனியே சென்று கொண்டிருந்தார். வணக்கம் , சொல்லுங்க ! என்ற அலைபேசியில் பேசிய தமிழ்ச் சொற்களுக்கே அவர் மயங்கி விட்டார்.

அங்கேயே ஒரு ஓரமாக நின்று எங்களுடன் சில மணித்துளிகளைச் செலவிட்டு உரையாடி மகிழ்ந்தார். பல தமிழறிஞர்கள் பெயரை எல்லாம் கூறி அவருக்கு உள்ள தொடர்பினைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் சக்திவேல் என்பவரைக் குறிப்பிட்டு அவர் பேசிய போது - நான் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லுரியில் நான் படித்த காலத்தில் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்திவேலை நினைவு கூர்ந்தேன். அவரைத்தான் அவரும் குறிப்பிட்டதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு தமிழாசிரியராக இருந்த பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் பற்றிப் பல செய்திகளை பகிர்ந்து கொண்டோம்.

துணவியை - ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை என அறிமுகப் படுத்தியதும் அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பும் அடைந்த மகிழ்ச்சியும் சொல்ல இயலாது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் பல தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.

துணைவி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்றவர் என அறிமுகப் படுத்தியதும் அவர் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடிக்க இயலாது. வெள்ளை வாரணர் உள்ளிட்ட பல தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். முனைவர் வ.சுப. மாணிக்கனார் மற்றும் பல துணைவேந்தர்களைப் பற்றிப் பேசினார்.

பயின்றது தமிழ் ! பயிற்றுவித்தது தமிழ் ! என்றதும் வாழ்க வளமுடன் ! என வாழ்த்தினார். எங்களுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி !

நட்புடன் சீனா
-------------------


41 comments:

cheena (சீனா) said...

வாங்க - வாங்க ! படிச்சுட்டு கருத்தச் சொல்லுங்க

Starjan (ஸ்டார்ஜன்) said...

வணக்கம் சீனா அய்யா நலமா ..

அருமைய்யான பதிவு ,

பெரியவருடனான உங்கள் சந்திப்பு மிக அருமை .

தமிழ்மொழி வளர நம்மால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும் .

இது வருத்தமான விசயந்தான் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// பயின்றது தமிழ் ! பயிற்றுவித்தது தமிழ் ! என்றதும் வாழ்க வளமுடன் ! என வாழ்த்தினார். எங்களுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ! ///

நீங்கள் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சி ..

தமிழ் அறிஞர்களுடனான சந்திப்பு நல்லாருக்கு ..

vasu balaji said...

ஆகா! படிக்கவே வியப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு சீனா ஐயா.

ஒத்த கருத்துடையவர்களை சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சியே தனி.

அப்பாவி முரு said...

எப்பிடி இருந்த நாம்,

இப்பிடி ஆகிட்டோம்...


ஆனாலும், மகிழ்சியாக உள்ளது. நாங்கள் முடிந்தவரை தமிழி பேச முயற்சித்து பலரும் வெற்றி கண்டுள்ளனர்...

இது எல்லோருக்கும் கைவர வேண்டுமென்பதே ஆசை!!

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டார்ஜன்

முயல்வோம் - வெற்றி பெறுவோம்

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

ஆமா ஸ்டார்ஜன் - தமிழ் நாட்டிலே - அதுவும் மதுரைலே இருக்கும் போதே - யாராச்சும் வந்து தமிழில் தமிழைப்பற்றிப் பேசினாலே மகிழ்கிற நிலையில் தான் நாம் இருக்கிறோம் - இல்லையா

cheena (சீனா) said...

வாங்க பாலா - வியப்பு ஆனந்தம் - அனைத்துமே உண்டு

cheena (சீனா) said...

வாங்க அக்பர் - ஒத்த கருத்துடையவர்கள் சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சி சொல்ல இயலாது

நல்வாழ்த்துகள் அக்பர்

cheena (சீனா) said...

வாங்க வாங்க முரு - எப்படி இருக்கீங்க - வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் - ஆசை நிறைவேறும் - கவலை வேண்டாம்

ஜோதிஜி said...

தாங்கள் செய்து கொண்டு தன்னலமற்ற சேவைகளும் தமிழ் மொழி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வலைதளம் இருக்கும் வரைக்கும் ஆவணம் போல் இருக்கும். அத்தனையும் உங்கள் சந்ததிகளுக்கு நீங்கள் சேர்த்துக்கொண்டுருக்கும் சொத்து இது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல சந்திப்பு,நல்ல பகிர்வு.

கலகலப்ரியா said...

அருமையா இருக்கு...

தமிழ் said...

நல்ல தமிழை வாசித்த ஒரு மனநிறைவு

நன்றி அய்யா

வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் கணேசன் ( ஜோதிஜி)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

வாங்க வாங்க ஸ்ரீ - வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் ஸ்ரீ

cheena (சீனா) said...

வாங்க வாங்க கலகலப்ரியா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் கலகலப்ரியா

cheena (சீனா) said...

அன்பின் திகழ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துக்ள் திகழ்

Noddykanna said...

வணக்கம்! இன்பம் பகிர்ந்தால் இரட்டிக்கும்! எல்லார் உடனும் பகிர்ந்தமைக்கு நன்றி! நல்லார் நட்பு, நாளும் நல்கி, நலம் பல சேர வாழ்துகள்!

அன்புடன்,
நாடி

cheena (சீனா) said...

அன்பின் நாடி

வந்து படிச்சியாக்கும் - நன்று நன்று நல்வாழ்த்துகள் நாடி

Thenammai Lakshmanan said...

//அதிலும் கூடவே துணையாக துணைவியும் நடப்பது தனி சுகம்தான்.//


உங்களுடைய இந்த வார்த்தைகள் உங்க அன்யோன்யத்தைப் பறை சாற்றுகின்றன சீனா சார்

//பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் //

அட பாத்திமாக் கல்லூரியில் நாங்கள் படித்தபோது எங்கள் தமிழ்த்துறை தலைவி இவங்கதான் சீனா சார்

Thenammai Lakshmanan said...

என்னுடைய அம்மாவும் தொலைபேசியை எடுத்தவுடனே சொல்லும் முதல் வார்த்தை வணக்கம் சொல்லுங்கள் என்பதுதான் சார் ...அதை அவர் ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறார்கள்..

அன்புடன் அருணா said...

/அங்கு தமிழாசிரியராக இருந்த பேராசிரியர் சொல்விளங்கும் பெருமாள் - அவரது துணைவியார் பேராசிரியை சக்தி பெருமாள் பற்றிப் பல செய்திகளை பகிர்ந்து கொண்டோம்./
இவங்க பட்டி மன்றம் ரொம்ப பிடிக்குமே எனக்கு!

புலவன் புலிகேசி said...

இப்படிப் பட்ட மனிதர்களை சந்திப்பது இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. நல்ல தமிழ் பேசுபவரைக் கண்டால் நம் சமுதாயம் ஏளனம் செய்கிறது..

cheena (சீனா) said...

அன்பின் தேனம்மை

துணையுடன் - துணைவியுடன் நடப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்

ஓ நீங்க மதுரையா - ஃப்பாத்திமாக் கல்லூரியா - ஓஒ நன்று நன்று

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் அருணா

பட்டி மன்றம் அஒப்பல்லாம் கேடு ரசிக்கறது உண்டு

நல்வாழ்த்துகள் அருணா

cheena (சீனா) said...

அன்பின் புலிகேசி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{ துணவியை - ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை என அறிமுகப் படுத்தியதும் அவர் முகத்தில் மலர்ந்த சிரிப்பும் அடைந்த மகிழ்ச்சியும் சொல்ல இயலாது.
}}}}}}}}}}}}


வணக்கம் சீனா அய்யா !
பதிவை படித்து முடித்ததும் . ஏனோ மனம் கனமாகிப்போனது . காரணம் தெரியவில்லை .நீங்கள் சந்தித்தவருக்கு வயதாகிருந்தாலும் . இன்னும் அவர் உள்ளத்தில் தமிழின் இளமை மாறாமல் தான் உள்ளது என்பதை உங்களின் பதிவின் மூலமாக உணர்ந்தேன் .பகிர்வுக்கு நன்றி !
ஓட்டு இடுவதற்கு முயற்சித்தேன் ஆனால் இயலவில்லை . பதிவை உடனே இணைக்கவும் .

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

ஓட்டுப்பட்டை மேலெ பத்திரமாக இருக்கிறதே - 5 ஓட்டு வுழுந்திருக்கே

ம்ம்ம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வணக்கம் என்கிற வார்த்தைய நான் பல காலத்துக்கு சொல்ல் தயங்கி இருக்கிறேன் .. தமிழ் ப்ளாக் உலகம் தான் அதை எனக்கு மீண்டும் சொல்வதற்கு பழக்கப்படுத்தி இருக்கிறது :))

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலட்சுமி

Joe said...

வணக்கம் சீனா அய்யா,
நலமா?

உங்களை மதுரையில் சந்தித்தது மகிழ்ச்சி.

அருமையான இடுகை.
உண்மை தான், யார் இந்த காலத்தில் தமிழில் பேசுகிறார்கள்? "தமிழ்" என்று சொல்லவே தடுமாடுகிறார்கள்!

cheena (சீனா) said...

வணக்கம் ஜோ

கருத்துக்கு நன்றி ஜோ

'பரிவை' சே.குமார் said...

முதல்முறை உங்கள் வலைப்பூ வந்தேன். அருமை. மதுரைக்கார அய்யா. இன்னும் நீங்கள் நிறைய எழுதவேண்டும். தொடரும் என் நட்பு உங்களுடன்...

நிகழ்காலத்தில்... said...

அலைபேசியினால் கிடைத்த நன்மைகளில் இது ஒன்று

நன்றி உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்தமைக்கு அன்பின் சீனா அவர்களே

cheena (சீனா) said...

அன்பின் குமார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

நாம் நண்பர்களாவோமே - தடை ஏதும் இல்லையே

நல்வாழ்த்துகள் குமார்

cheena (சீனா) said...

அன்பின் சிவசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவசு

நல்வாழ்த்துகள்

கொல்லான் said...

அய்யா,
தமிழைக் கற்றோருக்கு, சென்ற இடமெல்லாம் சிறப்பு.

cheena (சீனா) said...

வாங்க கொல்லான்

உண்மை - சென்ற இடமெல்லாம் சிறப்புதான்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொல்லான்
நல்வாழ்த்துகள் கொல்லான்
ந்ட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிவிஆர்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா